|
சீனாவிலிருந்து சீருடை துணி கொள்வனவூ! |
|
|
|
Friday, 30 July 2010 |
20 மில்லியன் மெற்றிக் தொன் சீருடை பாடசாலை மாணவா;களுக்கு அடுத்த வருடத்துக்கான சீருடைக்கான துணிவகைகளை சீனாவிலிருந்து நேரடியாக கொள்வனவூ செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைக்கு முன்னர் அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடைத்துணி பொதிகளை மாணவர்களுக்கு விநியோகிக்க உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு முன்வைத்திருந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த வருடங்களில் உள்நாட்டு நிறுவனங்களினூடாகவே சீருடைத் துணி கொள்வனவூ செய்யப்பட்டது.
எனினும் மாணவர்களுக்கு விநியோகிக்கத் தேவையான 20 மில்லியன் மெற்றிக் தொன் சீருடைத் துணி உள்நாட்டில் கிடைக்காததால் கடைசி நேரத்தில் கூடுதல் விலைக்கு சீருடை துணிகள் பெறப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். (எஸ்.டி.எம்.ஐ.10.30)
|