Kfg;G arrow nra;jpfs; arrow Latest News arrow நளினி முருகன் உட்பட 4 குற்றவாளிகளையூம் விடுதலை செய்ய முடியாது!
Advertisement

நளினி முருகன் உட்பட 4 குற்றவாளிகளையூம் விடுதலை செய்ய முடியாது! Print E-mail
Friday, 30 July 2010
இந்திய உயா; நீதிமன்றம் தீர்ப்பு

Imageமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினிஇ முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு ஆயூள் தண்டனையூம்இ அவருடைய கணவர் முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் ஆகியோருக்கு மரண தண்டனையூம் வழங்க தீh;ப்பளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் 4 பேரையூம் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்இ காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன்இ மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

இதையடுத்துஇ வக்கில் கருப்பன் என்பவர் சுப்ரீம் நீதிமன்றத்தில் இதே கோரிக்கையை வலியூறுத்தி மனுதாக்கல் செய்தார். அம்மனுவில் அவர் கூறி இருந்ததாவது:

ராஜீவ்காந்தி கொலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தனது இறுதி அறிக்கையை 1998ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி சமர்ப்பித்தது. அதில்இ ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்குஇ சி.ஐ.ஏ.இ மொசாத் போன்ற வெளிநாட்டு உளவூ அமைப்புகளின் தொடர்பு ஆகியவை குறித்தும்இ சந்தேகத்துக்குரிய மேலும் 21 பேரின் தொடர்பு குறித்தும் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு குறித்த குழு சிபாரிசு செய்திருந்தது.

அதன் அடிப்படையில்இ 1998ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதிஇ புலனாய்வின் கீழ்இ பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆணையம் விசாரணையை தொடங்கிய தகவலைஇ விசாரணை நீதிமன்றில் புலனாய்வூ துறை தெரிவித்திருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டோரின் மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம் நுதிமன்றிலும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அந்த தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் புலனாய்வூ மறைத்ததால்இ நளினிஇ முருகன் உள்ளிட்ட 4 பேரும் தண்டிக்கப்பட்டனர்.

சந்திராசாமி மற்றும் 21 பேரின் தொடர்பு பற்றி விசாரிக்கப்படவில்லை. எனவேஇ குறைபாடுள்ள விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நளினிஇ முருகன்இ சாந்தன்இ பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இம்மனுஇ நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர்இ முகுந்தன் சர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை என்று கூறிஇ நளினி உள்ளிட்ட 4 பேரையூம் விடுதலை செய்ய மறுத்து விட்டனர். (எம்.ரி.-977)