Kfg;G arrow nra;jpfs; arrow Latest News arrow முறையான முகாமைத்துவம் இல்லாமையே சுகாதாரத் துறையில் பற்றாக்குறைக்கு காரணம்!
Advertisement

முறையான முகாமைத்துவம் இல்லாமையே சுகாதாரத் துறையில் பற்றாக்குறைக்கு காரணம்! Print E-mail
Friday, 30 July 2010
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கவலை

Imageமுறையான முகாமைத்துவம் இல்லாமையே சுகாதாரத் துறையில் பற்றாக்குறைக்கு காரணம் என சுகாதார அமைச்சா; மைத்திரிபால சிறிசேன கவலை தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் சிறுவர் விடுதிகளுக்கான புதிய கட்டடத் திறப்பு வைபவம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே  அமைச்சர் இதனைத் தொpவித்தாh;. அவா;; மேலும் தெரிவிக்கையில்.

சுகாதாரத் சேவைக்கு வருடத்துக்கு அரசாங்கம் 8000 கோடி ரூபாவை செலவிட்டு வருவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கம் செலவிடுவதற்குப் புரம்பாக உலக வங்கி உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளும் பெருந்தொகையான நிதியை சுகாதாரத்துறை மேம்பாட்டுக்காக செலவிட்டு வருகின்றன.

தற்போதுள்ள வளங்களைக் கொண்டு சிறந்த முகாமைத்துவம் இடம்பெறுமானால் சுகாதாரத் துறையில் பற்றாக்குறைக்கு இடமில்லை.

எத்தகைய கட்டடங்கள் அமைக்கப்பட்டாலும் நிதியினைச் செலவிட்டாலும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் பற்றாக்குறை பற்றியே பேசப்படுகின்றன.

இதற்குக் காரணம் முறையான முகாமைத்துவம் இல்லாமையே. வளங்கள் முறையான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தப்படும் போதே அதன் மூலம் உச்ச பயனை பெற்றுக்கொள்ள முடியூம்.

தற்போது எமது மருத்துவர்கள் பல சாதனைகளைச் செய்து வருகின்றனர். அண்மையில் வெற்றிகரமாக பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய சத்திரசிகிச்சைகளை இந்தியாவில் மேற்கொண்டால் 15 மில்லியன் ரூபா செலவாகிறது.

அதனையே சிங்கப்பூரில் செய்தால் 20 மில்லியன் ரூபா செலவாகின்றது. எனினும் எமது மருத்துவர்கள் இதனை இலங்கையில் வெற்றிகரமாக மேற்கொள்கின்றமை பாராட்டக்குரியது.

நாடெங்கிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.

டெங்கு அதிகரிப்பில் கொழும்பு முதலாவது இடத்திலும் கம்பஹா கண்டி இரத்தினபுரி மாவட்டங்கள் முறையே இரண்டு மூன்று மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன.

அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றே மக்களும் பொறுப்புடன் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் என்றாh;.(எஸ்.டி.எம்.ஐ.12.20)